கடல் வழியாக ராமேசுவரத்தை வலம் வர ஏற்பாடு

இந்தியாவில் உள்ள முக்கிய “சுற்றுலா, ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரத்தை பல்வேறு கடற்பயண திட்டங்களின் மூலம் மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து சுமார் 100 பேர் பயணம் செய்யும் வகையிலான பெரிய படகில் தனுஷ்கோடி வரை சென்று மீண்டும் அங்கிருந்து புறப் பட்டு தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் வந்து அங்கிருந்து, பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து குருசடை தீவு என ராமேசுவரம் தீவை சுற்றி வரும் வகையில் […]

ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கும் பிரதமர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வரவுள்ளதாகவும்.புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி […]

ராமேசுவரம் கோவில் குருக்கள், பணியாளர்கள் விவகாரம்: இந்து அறநிலையத்துறை மீது நீதிமன்றம் காட்டம்

ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம். இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை.

ராமேஸ்வரம் மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. படகு மூழ்கி மாயமான மீனவர்களை மீட்டு தரவும் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பிச் சென்றனர்

தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று சுற்றி பார்த்து செல்வது வழக்கம். காலை 8 மணிக்கு மேல் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி சென்று ஆய்வுசெய்ய உள்ளனர்.

ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம்; தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள்

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வேதாளை கடலில் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் வீசி விட்டு தப்பினர். அந்த தங்கக்கட்டிகளை இந்திய கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள் கடலுக்குள் தேடி வருகின்றனர். இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வேதாளைக்கு தங்கக்கட்டிகள் சிலர் கடத்தி வருவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் […]

கடந்த 7ம் தேதி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை, விடுதலை செய்து அந்நாட்டின் மன்னார் நீதிமன்றம் உத்தரவு

ஓரிரு நாட்களில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என தகவல்

3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்: ராமேசுவரத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

ராமேசுவரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று […]

ராமநாதபுரம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திடீரென உள்வாங்கிய கடல்

சுமார் 50 மீ. தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம் காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருக்கலாம் என மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன்: திமுக நின்றால் ஆதரிப்பேன் சீமான்

செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்தால் திமுகவை நான் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஆதரிப்பேன்அதே வேளையில் ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் அவர் எதிர்த்துப் போட்டியிடுவேன் ஒருவேளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் திமுக தனது உதயசூரியர் தினத்தில் நின்றால் அது கட்சி வேட்பாளரை ஆதரிப்பேன் நான் நடந்து ..நடந்து.. கட்சி வளர்ப்பவன் அல்ல ! நடப்பதை சொல்லி கட்சியை வளர்ப்பவன் கூட்டத்தில் ஒரு கட்டத்தில் தொண்டர் ஒருவர் […]