தாம்பரம் ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் தண்டவாளம் அமைக்க எதிர்ப்பு

கிழக்கு தாம்பரம் ரெயில்வே மைதானம் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் முதல் தாம்பரம், கிழக்கு தாம்பரம், சிட்லப்பாக்கம், சேலையூர், செம்பாக்கம் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் நடைப்பயிற்சி, தடகளம், கால்பந்து, கிரிகெட் என பல்வேறு விளையாட்டு விளையாடவும் இலவச பயிற்சி பெறவும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தாம்பரம் ரெயில் முனைய விரிவக்கம் காரணமாக இந்த ரெயில்வே மைதானத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கான்கீரிட் சீப்பர் கட்டைகள், ஜல்லிகளை ரெயில்வே நிர்வாக சேமித்து வைத்துள்ளது. மேலும் இந்த மைதானத்தையும் முழுமையாக தண்டவாளங்கள் அமைக்க […]
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட சென்னையில் இருந்து மதுரை வழியாகக் கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது

தற்போது திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16127) வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 29 மற்றும் 30-ந் தேதிகளில் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
பெருங்களத்துர் ரெயில் நிலையத்தில் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

தூய்மை தினத்தை ஒட்டி தென்னக ரயில்வே அலுவலர்கள் ஊழியர்களும், பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை குடியிருப்பு நலச்சங்கம், PP residence welfare Association இணைந்து ரயில் நிலையத்தை சுத்தம் செய்கின்ற பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மிக சிறப்பாக ரயில் தண்டவாளம் மற்றும் பயணிகள் அமருமிடம் Subway அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் திரளான ரயில்வே அலுவலர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரயில் சேவைகளின் நேரம் மாற்றம்

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் இன்று (அக்.01) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை காரணமாக பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 34 விரைவு ரயில் சேவைகளின் பயண நேரம், கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே ரயில் சேவைகள் மாற்றம் குறித்து https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
ரயில் விபத்தில் உயிரிழக்கும் அல்லது காயம் அடைவோரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது

ரயில் விபத்துகளில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு, 50,000 ரூபாய். படுகாயம் அடைந்தோருக்கு, 25,000 ரூபாய். லேசான காயம் அடைந்தோருக்கு, 5,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த நிவாரண தொகைகளை 10 மடங்கு அதிகரித்து, ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துஉள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஆளில்லா லெவல் கிராசிங் உள்ளிட்ட ரயில் விபத்துகளில் உயிரிழப்பவரின் குடும்பத்திற்கு இனி 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதே போல், படுகாயம் அடைந்தோருக்கு, 2.5 […]
மதுரை சுற்றுலா ரயில் விபத்தில் பலி 10 ஆக உயர்வு

மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து விட்டது. இறந்தவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள். அங்கிருந்து 60 பேர் ஆன்மிகப் பயணமாக வந்தனர். இவர்கள் திருவனந்த புரத்தில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து நேற்று அதிகாலையில் மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் அவர்கள் வந்த பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டது. அந்த பெட்டியில் உள்ளே பூட்டிக்கொண்டு சமைத்த போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தியதால் இந்த தீ […]
சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் விரைவில் தொடக்கம்

இது சென்னை எழும்பூரிலிருந்து தமிழகத்தின் தெற்கு பகுதிகளுக்கு மேலும் அதிக ரயில் சேவைகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்படும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் இதை செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். 4.3 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் .279 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை எழும்பூரை வடக்கு நோக்கி செல்லும் ரயில்களின் இன்னொரு […]
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை சென்ட்ரல் வந்த ரயில் நிறுத்தம்

போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயில், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, திருநின்றவூர்- நெமிலிச்சேரி ரயில் நிலையங்கள் இடையே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மிசோராம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் அதிக குற்றங்கள் நடக்கும் 10 ரயில் நிலையங்கள்

தமிழ்நாட்டில் அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை, தாம்பரம், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு ஆகிய 10 நிலையங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இங்கு வெளிமாநில ரயில்கள் அதிகம் வந்து செல்வதால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. அதனால் கூடுதல் கண்காணிப்பு பணி மேம்படுத்தப்பட உள்ளது.