எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி? கூடும் செயற்குழு!

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ‛ இண்டியா ‘ கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 99 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சியில் அமர்வதற்கு தேவையான இடங்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தலையில், எதிர்க்கட்சி தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது. பல எம்.பி.,க்கள் இது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர். காங்கிரஸ் […]
அரசியல் சாசனத்தை காப்பதற்காக நின்ற கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு நன்றி: ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; “அரசியல் சாசனத்தை காப்பதற்காக நின்ற கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு நன்றி. நாட்டின் மகத்தான மக்களையும் வணங்குகிறேன். இந்தியா கூட்டணி அமையும் என அஞ்சா நெஞ்சமுள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெரிவிக்கிறேன். தவறாக பிரதமர் திசை திருப்ப முயன்றும் பொது நலன் சார்ந்த பிரச்சினையில் போராடி வென்றுள்ளோம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பட்டியலின மக்களின் குரலை உயர்த்தியுள்ளோம்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) பிரதமராக இருந்த மோடியிடம் அமலாக்கத் துறை ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள்: பிரதமர் மோடிக்கு, ராகுல் காட்டமான பதில்

காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி காட்டமான பதில் கொடுத்து உள்ளார்.நாட்டின் பிரபல தொழிலதிபர்களான அதானி, அம்பானி குறித்து வசைபாடி வந்த காங்கிரசும், ராகுல் காந்தியும், தற்போது அதை நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். அவர்களிடம் இருந்து வேன் நிறைய கட்டுக்கட்டாக பணம் காங்கிரஸ் பெற்றுள்ளதா? என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். […]
தமிழகத்தில் ஏப்.12ல் ராகுல்காந்தி பிரச்சாரம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏப்.12ல் தமிழகத்திலுள்ள நெல்லை, கோவையில் பிரசாரம் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் ராகுல்காந்தி
பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது – ராகுல்காந்தி

காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள். ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது – டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு
முதற்கட்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு

முதற்கட்டமாக 39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. சத்தீஸ்கர் – 6, கர்நாடகா -8, கேரளா -15, மேகாலயா-2, தெலங்கானா-5, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு வேட்பாளர்கள் அறிவிப்பு. கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி.
ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரியங்கா: அமேதியில் மீண்டும் ராகுல் போட்டியிட திட்டம்

பிரியங்கா மீண்டும் உ.பி. அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்தமுறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இங்கு கடந்த 2004 முதல் தொடர்ந்து எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகி விட்டார். இதனால் பிரியங்காவை அங்கு தொடரவைக்க காங்கிரஸ் விரும்புகிறது. இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்புள்ளது. அமேதியில் […]
உ.பி.,க்குள் வந்ததும் தனது தாக்குதலை துவக்கினார் ராகுல் காந்தி

ராமர் கோயில் நிகழ்ச்சியில் ஏழைகள் காணப்படவில்லையே..ஏன்.? என்று மக்களிடம் கேட்டார். அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா, அதானி, அம்பானி போன்றோர் அங்கே காணப்பட்டனர். ஏழைகள் மட்டுமல்ல, ஜனாதிபதியைக் கூட அங்கு காணவில்லை என்றார். ராமர் கோயில் நிகழ்வு என்பது, கோடீஸ்வரர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் நிகழ்ச்சி என்று எடுத்துரைத்த ராகுல் காந்தி, தனது பேச்சில் அமிதாப் பச்சன் – ஐஸ்வர்யா ராய் பெயரை 6 முறை உச்சரித்தார். எல்லைக்கு வந்ததும், உ.பி.,க்குள் வந்திருப்பது கண்கூடாக தெரியவந்தது என்றும் கிண்டலடித்தார். வரும் […]
சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஜனநாயக படுகொலை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளது என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.