புதுமணத் தம்பதிகளான காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, அவரது ஆசி பெற்றுள்ளனர்

“நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்”

“மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்” “கூட்டணி கட்சிகளை தாஜா செய்தும், மற்ற மாநிலங்களை வஞ்சித்துள்ளது” “அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது” “பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட்” “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும், பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது” – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்..

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம் மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி

“தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்” என ராகுல் காந்தி பதிவு

மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு

இண்டியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு.18 வது மக்களவையின் பிரதான எதிர்கட்சித் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.10 ஆண்டுகளுக்குப்பின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு!

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி & பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்

12-ந் தேதி வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு 3½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆனிராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சுரேந்திரன் (பா.ஜனதா) ஆகியோர் தோல்வியை தழுவினர். இதேபோல் ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 2 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் எந்த தொகுதியை தக்க வைத்துக் […]

எக்சிட் போல் மூலம் பங்குச்சந்தையில் முறைகேடு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச்சந்தைகளில் திட்ட முறைகேடு நடந்திருக்கிறது – ராகுல் பங்குச்சந்தை முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை – ராகுல் பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் – ராகுல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றியை மிகைப்படுத்தியது ஏன்? – ராகுல் தேர்தல் ரிசல்ட் அன்று முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழந்துள்ளனர் – ராகுல் காந்தி