ஓட்டுத் திருட்டு. ராகுல் காந்தி புதிய ஆதாரத்துடன் புகார்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஓட்டு திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட்டார். கர்நாடக மாநிலத்தில் வேண்டாத ஓட்டுகளை வெளியில் இருந்து இயக்கப்படும் மென்பொருள் மூலம் எப்படி நீக்கி உள்ளனர் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார் அவர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் சிலரை நேரில் அழைத்தும் காண்பித்தார். அவர் பெயரில் உள்ள இணையதளத்தில் மட்டும் இந்த பேட்டியை 60,000 பேர் நேரலையில் பார்த்தனர்.தேர்தல் ஆணையம் மீது மீது நேரடியாகவே ராகுல் காந்தி குன்றம் சாட்டினார்

நடுத்தர வர்க்கத்தினரை பிரதமர் விளக்கு ஏற்ற சொன்னார், அதை செய்தார்கள்

கைதட்ட சொன்னார் , கேள்வி கேட்காமல் அதையும் செய்தார்கள் பிரதமர் சொன்ன அனைத்தையும் செய்தார்கள் ஆனால் அந்த நடுத்தர வர்க்கத்தினரை நெஞ்சிலும் முதுகிலும் பட்ஜெட் என்ற பெயரில் குத்தியிருக்கிறார் பிரதமர். பிரதமர் மோடி பட்ஜெட் மீதான உரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களே அச்சத்தில் உள்ளனர்

GST, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது பாஜக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர் மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யு மாட்டிக் கொண்டதைப் போல மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது -மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சு

ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வேட்புமனு

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கும் ராகுல்காந்தி. ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார், ராகுல்காந்தி. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் சென்று வேட்புமனு தாக்கல். ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.

ராகுல் காந்தி மீது அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனில் அம்பானி கடுமையான தாக்குதல்…

எப்போதும் குடும்பம் நாட்டைக் கொள்ளையடித்த ஒரு பயனற்ற மனிதன், ஒவ்வொரு தேர்தல் பேரணியிலும் என்னை இழிவுபடுத்துகிறான் இன்று நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்கிறேன், ஊடகங்கள் அவரிடம் கேட்கும் என்று நம்புகிறேன். நானும் எனது குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு சுமார் 50000/- கோடி வரி செலுத்துகிறோம். லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கு சம்பளமும் வழங்குகிறோம்.* இந்த நாட்டிற்கு காந்தி குடும்பம் எவ்வளவு பணம் செய்கிறது…!????* ஒட்டுமொத்த குடும்பமும் வரி ஏய்ப்பு வழக்கில் நீதிமன்றத்திலிருந்து […]

அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோம் என தெரிந்ததால் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மாநிலங்களவை எம்.பி. ஆகியுள்ளார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அமேதியில் ராகுல் : காங்கிரஸ் அறிவிப்பு

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அமேதி தொகுதியில் கிஷோர் லால் சர்மா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுள்ளார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ராகுல்காந்தி ஏற்கனவே வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள நிலையில் அவர் 2வது தொகுதியாக ரேபரேலியிலும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி கைநழுவி விட்டது பிரதமர் மோடிக்கு தெரியும்: ராகுல்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன. இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை […]