புதுச்சேரி, விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் மக்கள் தவிப்பு

புதுச்சேரி / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. திங்கள்கிழமையைப் பொறுத்தவரையில், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், […]
விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நெ.பில்ராம்பட்டு கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழை கொட்டியதால், பல பகுதிகள் வெள்ளக்காடாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை […]
புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு!..

புதுச்சேரி : படப்பிடிப்பிற்காக சென்றிருந்த நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாகபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உடன் சந்திப்பு
தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது

கேரளா மற்றும் தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இக்காலகட்டத்தில் அதிகமாக மழை பொழிவு இருக்கும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. வடமாநிலங்களில் கடந்த வாரம் வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. சில தினங்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பரவியது. தற்போது தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்

www.centacpuducherry.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு இதுவரை 16,459 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரியில் மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவையை நிறுத்துவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவையை நிறுத்துவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. போதிய பயணிகள் வரத்து இல்லாததால் பெங்களூரு, ஐதராபாத் விமான சேவைகள் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாகக் கொலை செய்த கொடூரர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்!

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சியையும், பெரும்வேதனையையும் தருகிறது. பெற்ற மகளை இழந்து ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் சிறுமியின் பெற்றோரை என்ன வார்த்தைகள் சொல்லித் தேற்றுவதென்று தெரியவில்லை. குழந்தையை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக் குறித்துப் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. […]
புதுச்சேரி: மழை காரணமாக, கடற்கரை சாலையில் பொது மக்களுக்கு போலீசார் தடை

கடற்கரை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கடலில் குளிக்க தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்
புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

இது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர் கடிதத்தில், `சொந்த பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துவது நாகரீகம் அல்ல. தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவுதாக உணர்ந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது; யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.