ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; நிச்சயம் விலைகொடுக்கும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு கேபினெட் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய போது: இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் விலை கொடுக்கும். ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றார்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி!

மத்திய அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌதி முர்முவிடம் அளித்து மோடி ராஜினாமா செய்தார்
ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு. இரு தரப்பு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்திரனரை சந்திப்பது போல் உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நான் UAE-க்கு வருகை தந்துவிட்டேன். இது நமது நெருக்கமான உறவை காட்டுகிறது- UAE பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி.
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாதம் இறுதியில் இந்தியா வருகை

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாட்றம்பள்ளி அருகே விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சம், பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மிழக அரசு சார்பில் இறந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் அறிவிப்பு. வாணியம்பாடி,செப்.11- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சாலாவுக்கு சுற்றுல்லா சென்று இன்று காலை சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வேன் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதி பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து […]