நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடான இந்தியா, பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வகிக்கின்றன

“சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி,மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது”
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை, மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, புதுதில்லி புறப்பட்டுச் செல்லும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை, மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் (27.10.2023) வழியனுப்பி வைத்து, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021-க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி இதுதொடர்பாக தான் எழுதிய கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்”

சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்திய குடியரசுத் தலைவர் அவர்களை முதல்வர் அவர்கள், சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற காட்சி….!

சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவியேற்றார் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம்!

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 66, பதவியேற்றார். தேர்தலில் தர்மனுக்கு 76 சதவீத சிங்கப்பூர் மக்கள் ஓட்டளித்திருந்தனர். சமீபத்தில் சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங் 76, டான் கின் லியான் 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. ஆனால் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் […]
தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறார் ஜனாதிபதி

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஜனாதிபதி

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்த இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார். உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள், மற்றும் பலர் வரவேற்றனர்.
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகஸ்ட் 7,8ம் தேதிகளில் புதுச்சேரி செல்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டு, சென்டர் மீடியனில் உள்ள செடிகள் வெட்டி அழகுபடுத்தப்படுகிறது. மேலும், சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசும் பணியும் நடக்கிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூரு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அடுத்த மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காரில் செல்கிறார். அங்கு, பழங்குடியின மக்கள் மற்றும் ‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார். மீண்டும் காரில் மசினகுடி […]