தபால் துறையில் 44,228 காலியிடம்; பத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதி

தபால் அதிகாரி மற்றும் உதவி தபால் அதிகாரியாக பணியாற்ற, பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு; நாடு முழுவதும் 44,228 காலியிடங்கள் உள்ளன; தமிழகத்தில் மட்டும் 3,789 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,5ம் தேதி. தபால் துறையில் 44,228 பேருக்கு தபால் அதிகாரி (போஸ்ட் மாஸ்டர்), உதவி தபால் அதிகாரி பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு மட்டுமே.விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் கையாளும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். அனைத்து […]

மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை தபால் நிலையத்தில் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை தபால் நிலையத்தில் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் சமூக சேவகர் வி.சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மற்றும் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி அட்வகேட் ராமதாஸ், பாலு கலந்து கொண்டனர். போஸ்ட் மாஸ்டர் மூர்த்தி வரவேற்றார். இறுதியாக மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணன் நன்றி கூறினார். சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை வி.சந்தானம் கூற தபால் நிலைய ஊழியர்கள் […]

பதிவு அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவு..!

இந்திய அஞ்சல் சேவையில் பதிவு அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் 173 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அஞ்சல் துறை தபால், மணி ஆர்டர் , பார்சல் மற்றும் சேமிப்பு மற்றும் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு தந்தி சேவை மூடு விழா கண்டது. தபால் சேவையில் மிக முக்கியமாக கருதப்படுவது பதிவு அஞ்சல் சேவையாகும். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google […]

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு!

அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. 5 ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.5%ல் இருந்து 6.7%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 பெற… அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கலாம்

மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கை அஞ்சலகங்களில் தொடங்கலாம் என தாம்பரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மூ.மனோஜ் தெரிவித்துள்ளார். இதற்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் கிடையாது. உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளர்கள், தபால்காரர் மூலம் மகளிர் உரிமைத்தொகையை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு ரூ.50 மட்டும் போதும்.. 35 லட்சம் பெறும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரியுமா?

தபால் அலுவலகத் திட்டம் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 50 முதலீடு செய்து, ரூ. 35 லட்சம் வரை வருமானத்தைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் பலவும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது. நாம் பார்க்கப்போகும் திட்டம் போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா ஆகும். இது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையாகும். இது ஐந்து வருட கவரேஜ்க்குப் பிறகு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றப்படலாம். பாலிசி 55, 58 அல்லது […]