எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்த முடிவு!
சென்னை சூளை, தட்டான்குளம் பகுதி வீட்டு உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலின் போது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரசுராமன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் வாக்காளர்களை ஏமாற்றியதை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்த முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டது. வீட்டு உரிமையாளர்களை கருத்து கேட்ட பின்பு போராட்டம் தேதி அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது என கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிர்வாகிகள் ஒருவரான ஆர்.டி.பிரபு மற்றும் முனியாண்டி, பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர்.
சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு!
பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது – உயர்நீதிமன்றம்.

பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் – உயர்நீதிமன்றம். போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் சொல்லவில்லை. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்?. இந்த விவகாரத்தில் தீர்வு காண என்ன சிக்கல் உள்ளது? போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான் – உயர்நீதிமன்றம் பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைப்பு – தமிழக அரசு பதில். ஓய்வூதியர்களுக்கு […]
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.

நேற்று முதல் நீடித்த அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தில் தகவல். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என ஒப்புதல்.
தென்காசி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்;
400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு 4 கட்ட போராட்டம் அறிவிப்பு;

டிச. 28-ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் நவ. 1-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் நவ. 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பிரச்சார இயக்கம் நடைபெறும் எனவும் அறிவிப்பு
திமுக ஆட்சிக்கு எதிராக பாஜக மகளிர் போராட்டம்

திமுக தேர்தல் அறிக்கையின்படி அனைத்து மகளிர்க்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்காதது, பால், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வை உள்ளிட்டவைகளை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் முடிச்சூர், லட்சுமி நகர் பகுதியில் நடைபெற்றது.இதில் மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு […]
அரசுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி நாளை (அக்.13) போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை (அக்.13) போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து டிட்டோஜாக் […]
மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு மீண்டும் அழுத்தம் தரக்கோரி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் முதல்வர் ரங்கசாமியுடம் சந்திப்பு. மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். சட்டமன்ற உறுப்பினர் நேரு.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

கடலூர் சிப்காட் வளாகத்தில் அரசின் விதிகளை மதிக்காமல் பல ரசாயன நிறுவனங்கள் செயல்படுவதால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம். அக்கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.