உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் பொன்முடி

தீர்ப்பின் நகல் கிடைத்ததும், வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொண்ட பின் 2ம் தேதி மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு […]
30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் ₨50 லட்சம் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை எனவும் நீதிபதி எச்சரிக்கை
அமைச்சர் பொன்முடி வழக்கில் வாதம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜர் வயது, உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என பொன்முடி தரப்பில் வாதம் அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனையை அறிவிக்கிறார் நீதிபதி ஜெயச்சந்திரன்
நிலுவையில் மற்றொரு வழக்கு:

கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக பொன்முடி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, விசாலாட்சி உள்ளிட்டோருக்கு எதிராக 2002-ல் அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு […]
ஜெயலலிதா முதல் பொன்முடி வரை… தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் யார்.? யார்.? பட்டியல் இதோ
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ- எம்பிக்கள் மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் கடந்த 2013 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாஜகவை சேர்ந்த சுரேஷ் கணபதி மின்சார திருட்டு வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பப்பு கலானி கொலை […]
பொன்முடி, அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு; மேலும், அவர்கள் மேல் முறையீடு செய்வதற்கு 30 நாள்கள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்ததாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
பொன்முடி பதவிக்கு சிக்கல் :

ஒட்டு மொத்தமாக அமைச்சரவையை மாற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவு ,- கோட்டையில் பரபரப்பு.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ பதவி பறிபோனது என தகவல்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றன

சட்டப்பேரவை செயலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு நகல் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியும் பறிபோகிறது. நாளை மறுநாள் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சுப்ரீம் கோர்ட் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும்

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு பதில் மொத்தம் 40 நாட்கள் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவுகளை பார்க்காமல் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல – ஓய்வு பெற்ற நீதிபதி எனது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்துள்ளார். ஒரே உத்தரவில், 28 ஆண்டுகள் கட்டிக்காத்த பணி நேர்மை பறிக்கப்பட்டது – ஓய்வு பெற்ற நீதிபதி