மார்ச் 3 : போலியோ சொட்டு மருந்து முகாம்

பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து முகாம், மார்ச் 3ல் நடக்கிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்த, ஆரம்ப, துணை சுகாதார நிலையம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பொது இடங்களில், நடமாடும் மருத்துவக்குழு, மொபைல் வாகனம் மூலம், காலை 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.