“தொழிலாளர்களை மோசமாக நடத்தும் காங்., தி.மு.க.”பிரதமர் மோடி விமர்சனம்
வெளிமாநிலங்களில் உள்ள பீகார் மாநில புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் அவமதித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மாநிலத்தவர்களை தி.மு.க.வினர் மோசமாக நடத்தியதாகவும் குற்றச்சாட்டு.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை.
பிரதமர் மோடி மரியாதை செலுத்தியபோது ஒற்றுமை சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தையும், தபால் தலையையும் வெளியிட்டார் பிரதமர் மோடி.
பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் நரேந்திர மோடி
பாஜக எம்பி.க்களின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

▪️ பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். x பக்கத்தில், பாப்பம்மாளின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். ▪️. அவருடைய அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை நேசித்ததாக கூறிய அவர், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடையை பரிசளித்தார் முதலமைச்சர். மேலும் பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்பிராய்டரி சால், பவானி ஜமுக்காளத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்.
டெல்லியில் பிரதமர் உடனான சந்திப்புக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு.

தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியுடன் அளித்துள்ளேன் சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் மத்திய- மாநில அரசுகளின் கூட்டாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியானது. எனினும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை. உரிய நிதிப்பங்கீடு அளிக்காததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் அல்ல – அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்று கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க கோரிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார்.தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்வருடன் முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்.பிக்கள் உடன் செல்கின்றனர்.பிரதமர் மோடி […]