தூத்துக்குடிக்கு அனுப்ப பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்தில் குவிந்த நிவாரண பொருட்கள்

தூத்துகுடி மாவட்டம் காலங்கரை பகுதி அதித கனமழையால் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பீர்க்கன்காரணை காவல் ஆய்வாளர் நெடுமாறன் தலைமையில் பல்வேறு தன் ஆர்வலர்களிடம் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள 600 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, ரவா, கோதுமை மாவு, ரொட்டி, பிஸ்கட், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை குவித்தன. அதனை காவல் துறையினர் லாரியில் ஏற்றி தூத்துகுடி மாவட்டம் காலங்கரை கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.