இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன! இலங்கை பல்லெகலே மைதானத்தில் மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்கவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் முதன் முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிப்பு! இந்தியா பாகிஸ்தானை துவம்சம் செய்யும் கிரகம் சாதகமான நிலையில் உள்ளது.
அரசு ரகசியங்களை பாதுகாக்க தவறியதாக குற்றச்சாட்டு : பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கைது!

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவரான ஷா மஹ்மூத் குரேஷி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் அவரை சனிக்கிழமை இரவு மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.குரேஷி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய தகவலின் ரகசியத்தை காக்க தவறிய குற்ற்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இஸ்லாமாபாத் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவரை மத்திய புலனாய்வு முகமை ஒருநாள் […]
ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்ற விஞ்ஞானி மீது ஏன் தேசத் துரோக வழக்கு பதியவில்லை

அவரைக் காப்பாற்றத்தான் தேசத் துரோக சட்டம் நீக்கப்படுகிறதா? ➖➖➖➖➖➖➖➖ ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இந்திய விஞ்ஞானி கைது.. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.) மூத்த விஞ்ஞாளியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்மநபரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஓ. ஊழியர் ஒருவர் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தினர். அப்போது விஞ்ஞானி நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானை […]
பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.290, டீசல் ரூ.293

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 14-ம் தேதி அன்வர் உல் ஹக் ககர் இடைக்கால பிரதமராக, நியமிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. எரிபொருள் மட்டுமல்லாது, தக்காளி, வெங்காயம், அரிசி, கேஸ் சிலிண்டர் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. […]
பஞ்சாப்பில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை

பஞ்சாப்பின் டர்ன் தரான் பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (ஆக.11) அதிகாலையில் பாகிஸ்தானியர் ஒருவர் இந்த எல்லைப் பகுதியில் நுழைய முயன்றார். பாதுகாப்பு வீரர்கள் எச்சரித்தும் அவர் எல்லை வேலியை நெருங்கி வந்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அதிரடி கைது: எம்.பி. பதவி பறிப்பு; 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது

இஸ்லாமாபாத்: தோஷகானா முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(70) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இம்ரான் கான் […]
பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 15 பேர் உயிரிழப்பு 40 பேர் காயம்.

பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் முதவியுடன் மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.