முறைகேடு: ஓ.எஸ்.மணியன் மீது நடவடிக்கை?
நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். தனது சொந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்காக, தகுதியற்ற இடத்தில் மருத்துவக் கல்லூரி கட்டி மக்களின் நிதி விரயம் செய்யப்பட்டுள்ளதால், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.