ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டு இருப்பார்

– முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
காஞ்சிபுரத்தில் கனமழை காரணமாக ஒ.பன்னீர்செல்வம் தொடங்கவிருந்த புரட்சிப் பயணம் ஒத்திவைப்பு

அதிமுகவை மீட்டெடுப்பதற்காக புரட்சிப் பயணம் இன்று தொடங்கவிருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூட்டம் தடைபட்டது. பொதுக்கூட்டம் மழை காரணமாக திடீர் ஒத்திவைப்பு வேறொரு நாளில் நடைபெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு.
OPS தரப்புக்கு அமித்ஷா அட்வைஸ்

தனிக்கட்சி தொடங்க வேண்டாம் என முன்னாள் முதல்வர் OPS-ஸுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. EPS அணிக்கு மாறும் தனது ஆதரவாளர்களை தக்க வைக்க தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக OPS ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் OPS தரப்புடன் பேசிய பாஜக மேலிடம், தேவைப்பட்டால் தாமரைச் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் OPS-ஸுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளதாம்.
அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ்க்கு மேலும் பின்னடைவு

உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய, சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் அதன் தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க கோரிய தங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற […]
அதிமுக மாநாடு; ஓபிஎஸ் ஆலோசனை

மதுரையில் அதிமுகவின் “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” ஆகஸ்ட் 20ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநாடு தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எடப்பாடிக்கு எதிராக ஓ பி.எஸ்

மதுரையில் எடப்பாடி தலைமையில் மதுரை வுர வரலாற்று மாநாடுநடத்துகிறார். இதற்க்குப் போட்டியாக ஓ பி எஸ் சென்னை வேப்பேரியில்ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார். மாவட்டச் செயலாளர்களைஅழைத்துள்ளார்.
ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது …….

2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என ஓ.பி.ரவீந்திரநாத் கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் தீர்ப்பு நிறுத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்…..