தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு 12ம் தேதி தொடக்கம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12ம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும்.