மின்கட்டணம் – புதிய நிபந்தனை

இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்என மின்வாரியம் அறிவிப்பு அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும் ₨1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைனில் மூலமே செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு.
பட்டாசு கடைகள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இ-சேவை மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
சென்னை சேப்பாக்கத்தில் 22ம்தேதி சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டி..இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்த மகாதேவ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்டார்

போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவி உப்பாலை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரியில் தொடரும் ஆன்லைன் மோசடி!

மரப்பாலம் பகுதியை சார்ந்த 34 வயதுடைய பெண்ணை வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைன் பிஸ்னஸ் செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ. 10 லட்சத்து ரூ.62 ஆயிரம் ரூ ஏமாற்றிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறது.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் ஆன்லைன் தளம் பிக்பில்லியன் டேஸ் விற்பனை நடத்தியது

பல்வேறு பொருட்கள் சலுகை விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருவதால் பெரிய திரையில் பார்க்க விரும்பிய ஆர்யன் என்பவர் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சோனி பிராவியா எக்ஸ் 7 கே 55 இன்ஞ் டிவியை பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து இருந்தார். ஆனால் அவருக்கு தாம்சன் டிவி சப்ளை செய்யப்பட்டது. இதை மாற்ற அவர் பலமுறை விண்ணப்பித்தும் 20 நாட்களாகியும் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதுபற்றி அவர் தனது டிவிட்டரில் […]
சென்னை பல்கலையில் ஆன்லைனில் பி.காம், பிபிஏ

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விமையத்தின் மூலம், வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைன் மூலம் பி.காம், எம்.காம், பிபிஏ ஆகிய மூன்றாண்டு இளநிலைக் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தவும், தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், விடியோ மூலம் வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவுட்சோர்சிங் முறையில் செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம்..” அமேசான் அதிரடி அறிவிப்பு..!!

வரும் 19-ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமேசான் அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், மத்திய அரசு நிர்ணயித்த கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், இணைய வழி […]