ஓணம் பண்டிகை 2023 எப்போது? மகாபலி சக்கரவர்த்தி, வாமன அவதார புராண கதை தெரியுமா?
ஓணம் பண்டிகை கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட பத்து நாட்கள் கொண்டாடப்படக்கூடிய மிகப் பிரம்மாண்டமான பண்டிகை ஆகும். பண்டிகை மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை உணர்த்துவதாகவும், மிகச்சிறந்த அரசன் ஆன மகாபலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வருவதாகவும் ஐதீகம். ஓணம் பண்டிகை 2023 எப்போது? ஓணம் பண்டிகை சிங்கம் மாசம் என அழைக்கப்படக்கூடிய, சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கக் கூடிய ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் கொண்டாடப்படக்கூடிய மிக சிறப்பான […]
சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்
தேவையான பொருட்கள்: அரிசி 1/2 டம்ளர், தேங்காய்ப்பால் -4 டம்ளர், வெல்லம் – 2 டம்ளர், ஏலக்காய் தூள் -சுவைக்கு, பால் -1 டம்ளர், நெய் – தேவைக்கு, தேங்காய் துண்டுகள் -கைப்பிடியளவு, முந்திரி – தேவையான அளவு, உலர்திராட்சை -2 ஸ்பூன் செய்முறை: வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, […]
ஓணம் பண்டிகையின் வரலாறு தெரியுமா?
கேரளாவில் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத […]
ஓணம் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது
விலையை கட்டுப்படுத்த தான் ஆட்கள் இல்லை என பொதுமக்கள் புலம்பல்! நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாடப் படுவதையொட்டி குமரி மாவட்டம் தோவாளையில் இரண்டு நாட்கள் சிறப்பு மலர் சந்தை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700 டன் பூக்கள் இந்த சந்தைக்கு வந்துள்ளது. ஓணத்தின் சிறப்பு அம்சமான அத்தப்பூ கோலங்களுக்கு தேவையான வாடாமல்லி, கேந்தி,சம்பங்கி, ரோஜா, தாமரை,மரிக்கொழுந்து, செவ்வந்தி என அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயார்வு. கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பூ […]