“நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி”

நாளை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒரிசா, வடக்கு ஆந்திரா கரையோரம் அதற்கு அடுத்த 2 நாள் நிலவக்கூடும்.
கிருஷ்ணருக்கு மணல் சிற்பம்

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, ஒடிசாவின் புரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ள மணல் சிற்பம்.
ஒடிசா மாநிலத்தில் முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு

இன்று மாலை 5 மணிக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி ஒடிசா முதல்வராக பொறுப்பேற்கிறார். ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை பாஜக வீழ்த்தியது. மோகன் சரண் மாஜியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
ஒடிசா ரெயில் விபத்து: உரிமை கோரப்படாத 28 உடல்கள் தகனம் – இறுதி சடங்குகளை செய்த பெண் தன்னார்வலர்கள்

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்து உரிமை கோரப்படாத 28 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அந்த உடல்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதி சடங்குகளை செய்தனர்.புவனேஸ்வர், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ந் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரெயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம் புரண்டன. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் […]
வங்கக்கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என கணிப்பு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.