என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

என்.என்.சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தீப்பிடித்த இயந்திரத்தின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தங்களது கோரிக்களைகளை 2 வாரத்தில் அளிக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நீதிபதி உத்தரவு. அணு மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி முறைகளை கையாள வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம். ‘அணு மின் நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும் இந்த நீதிமன்றமும் எதிர்பார்க்கிறது; காவிரி நதி மீது சோலார் ஆலை அமைத்தால் NLC அளவுக்கு மின்சாரம் கிடைக்கும்” NLC நிர்வாகம் […]
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா?

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு,என்.எல்.சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க மறுப்பது ஏன்? ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட என்.எல்.சியால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆயிரம் மடங்கு அதிகம். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி… என்.எல்.சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஒரு நீதி என்பதே பெரும் அநீதி ஆகும். […]
என்எல்சி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

என்எல்சி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் என்எல்சிக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் தான் என உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்தார். நிலக்கரி தீர்ந்துவிட்டால் நிலம்கொடுத்த தொழிலாளர்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்ப தயங்கமாட்டார்கள். தொழிலாளர் – என்எல்சி பிரச்னைக்கு தீர்வுகாண மத்தியஸ்தரை நியமிப்பது பற்றி மத்திய அரசு 22ல் கூறவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அடிமையாகி விட்டார்.

சென்னையில் ‘வீராவேசம்’ செய்யும் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? என்எல்சி விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அறிவித்தும், அன்புமணியின் மவுனம் ஏன்? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை என்று கூறிவிட்டு சென்னை வந்திருக்க வேண்டாமா? மக்களை தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி வருகிறார் அன்புமணி ராமதாஸ்-அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை.
என்எல்சி நிலம் எடுப்பு: நீதிபதி வேதனை

நெய்வேலியில் 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காத நீங்கள், பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்கைளை விட்டு கால்வாய் தோண்டியதை பார்க்கும் போது எனக்கு அழுகை வந்துவிட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது.