டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. ▪️ வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். ▪️ தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது.
உதயநிதியின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் காட்டம்
“மத்திய அரசில் இருப்பவர்கள் ‘அப்பன் வீட்டு பணத்தையா தருகிறார்கள்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம்” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு 2015 வெள்ளத்திற்கு பிறகு என்ன பாடம் கற்றீர்கள்? போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை மக்களை பாதுகாக்க மாநில அரசு தவறி விட்டது நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் அளிக்கலாமே, ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்?
25.3.1989 தமிழ்நாடு சட்டசபையிலேயே ஜெயலலிதா அவர்களுடைய சேலை பிடித்து இழுக்கப்பட்டது

அதற்கு பிறகு முதலமைச்சராகாமல் இந்த அவைக்கு நான் வரமாட்டேன் என அவர் சபதமிட்டார். 2ஆண்டுகள் கழித்து முதல்வராக அந்த அவைக்கு வந்தார். ஆனால் இவர்கள் திரௌபதி குறித்து பேசுகிறார்கள்:நிர்மலா சீத்தாராமன்
ஜல்லிக்கட்டு போட்டியை காட்டுமிராண்டித்தனம் என முந்தைய அரசு கூறி தடை விதித்தது

அப்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரும் முதலைகண்ணீர் வடிக்க வேண்டாம் என நிர்மலா சீதாராமன் பேச்சு.
மணிப்பூர் இன வெறி விவகாரம்:

போகாத ஊருக்கு வழிகாட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மணிப்பூர் இளம் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் படுகொலை வீடியோக்கள் உலக அளவில் பெரும் அதிர்வு ஏற்படுத்தியது. இதுகுறித்தும்??? பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை??? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்க திணறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காசி தமிழ் சங்கம். தமிழ் சமஸ்கிருதம் இந்தி புறக்கணிப்பு என்று சம்பந்தமில்லாமலும் மதுரை எய்ம்ஸ் நிதி பற்றாக்குறை குறித்தும் ஜல்லிக்கட்டுக்கு பாஜக போராடியதாக ஒன்றிய அமைச்சர் பேசினார். பேச வேண்டிய […]
காசி தமிழ் சங்கம், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் தமிழ்நாடு சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்

ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிதனம் என தடை செய்தது காங்கிரஸ் கூட்டணி; ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு நிரந்தரமாக நடைபெற வழிசெய்தது பிரதமர் மோடி அரசு- நிர்மலா சீதாராமன் இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது. நீங்கள் தமிழை வளர்க்கும் அதிகாரம் இருக்கும் போது சமஸ்கிருதம், இந்தியை படிக்க கூடாது என தடுக்க அதிகாரம் இல்லை. மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- நிர்மலா சீதாராமன்
எய்ம்ஸ் கட்டப்படும் என்று நிர்மலா சீதாராமன் பேசியபோது, எப்போது எப்போது என்று திமுக எம்.பி.க்கள் முழக்கம்

மத்திய அரசுதான் முழுக்க முழுக்க ரூ.1977 கோடி மதிப்பீட்டில், ரூ.1627 கோடி கடனில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த நிதிச் சுமையும் இல்லை; இதனால் அதைப்பற்றி கவலைப் பட வேண்டாம்- மதுரை ஏய்ம்ஸ் கட்டுமானம் குறித்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
கடனை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை கூடாது: நிதியமைச்சர்

மக்களவையில், சிறிய அளவில் கடன் பெற்றவர்கள் அதை திருப்பி செலுத்த முடியாதநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கைகளை சில வங்கிகள் எடுப்பதாக புகார்கள் வருகின்றன. கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
அதிக கடன் – தமிழகம் முதல் இடம்!

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம். கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூபாய் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடியாக உள்ளது. -தெலுங்கானா எம்.பி கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!