குரோம்பேட்டை நியூ காலனிக்கு சங்கரய்யா பெயர் மாநகராட்சி தீர்மானம்

சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரான என்.சங்கரையா சில தினங்களுக்கு முன் காலமானர். இந்த நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜி.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், இந்திரன், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிராபானு நாசர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் தாம்பரம் மாநகராட்சியின் 2 வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மறைந்த சங்கரையாவிற்கு புகழ் சேர்க்கும் விதமாக […]
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

குரோம்பேட்டை நியூ காலனி ஆறாவது குறுக்கு தெருவில் திடீரென்று மாநகராட்சி அவசரமாக ஒரு கால்வாயை அமைத்துள்ளது. இந்த கால்வாய் சீராக கட்டப்படவில்லை. கோணலும் மாநலுமாக இருக்கிறது. முறையாக கட்டப்படவில்லை. கால்வாயை எந்த இடத்தில் இணைப்பது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். அந்தக் கால்வாய் மூடப்படவும் இல்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் அந்தக் கால்வாயை தாண்டித்தான் வெளியே வர வேண்டும். இது குறித்து சமூக ஆர்வலர் வி.சந்தானம் கூறும்போது தனியார் பரிசோதனை நிலையம் ஒன்றிற்காக இப்படி அவசரமாக கால்வாய் […]