முதுகலை நீட் – தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி?

PG நீட் தேர்வு – தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திராவின் உட்பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. வரும் 11ம் தேதி தேர்வு நடக்க உள்ள நிலையில், தற்போது ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட் இல்லை, விமான டிக்கெட் கட்டணம் ₹40,000 வரை காட்டுகிறது என தேர்வு எழுத இருப்போர் வேதனை.
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

1600 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட் தோ்வு முடிவுகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென வெளியான நிலையில், சில மாணவா்களுக்கு முரண்பட்ட மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பது விமா்சனங்களுக்கு வித்திட்டுள்ளது

அதேபோன்று, ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியான சூழலில், முன்னெப்போதும் இல்லாத வகையில், 67 போ் நாடு முழுவதும் முதலிடம் பெற்றிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நிகழாண்டு நீட் தோ்வு 4,750 மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 23 லட்சம் போ் பங்கேற்றனா். ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத் தாளில் இடம்பெற்றிருந்தன. நீட் தோ்வைப் பொருத்தவரை ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். […]
“நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை”

நீட் தேர்வு முடிவுகளை திட்டமிட்டபடி வெளியிட எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு 2024 நீட் நுழைவுத்தேர்வு மே 5-ல் நடைபெற்ற நிலையில் ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன..
மே 5-ம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி – தொழிற்கல்வி இணை இயக்குனர்

மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவு. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டம். ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி – யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.
‘நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது’ – சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது. திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. உண்மைத்தன்மையை நிரூபிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கூறியதால், மனுவை வாபஸ் பெற்றார் மனுதாரர்.
நீட் விலக்கு கோரி தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கிழக்கு தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்,காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக துணைச் செயலாளர் பொன் சதாசிவம், அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ஷாஜகான், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை […]
நீட் என்றால் பூஜ்ஜியம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் மதிப்பெண் தேவையில்லை என்ற உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தோ்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதனை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர்(எக்ஸ்) செய்தி: “நீட் தேர்வின் பலன் என்ன என்றால் பூஜ்ஜியம் தான் என்பதை மத்திய பா.ஜ.க. அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. முதுநிலை […]