மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிவு – நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிந்தது

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிந்த நிலையில், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவை கொண்டது. அணை கட்டப்பட்டபோது, காவிரி கரையில் இருந்த மக்கள் மேடான பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றை அப்படியே விட்டு சென்றனர். அணை நீர்மட்டம் குறையும் போது, காவிரி […]