முதல் பாடலை வெளியிட்ட இளையராஜாவின்பேரன்
இளையராஜாவின் பேரனும் கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஸ்வர், தான் இசையமைத்துப் பாடிய ‘ஓம் நமசிவாய என்னும் பாடலை திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சினிமாவில் இசையமைக்க விரும்புவதாகவும், நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் யத்தீஸ்வர் பேட்டியில் கூறியுள்ளார்.
இசை அறிஞர்கள் பற்றிய புதிய நாடகம்.
19 இசை அறிஞர்கள் பற்றிய புதிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது .16 மொழிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த நாடகத்தை நாடக காவலர் செம்மல் ஆர் .எஸ் மனோகரின் அடுத்த தலைமுறை குழுவினர் நடத்துகிறார்கள். எஸ். சிவ பிரசாத் , கலைமாமணி எஸ் சுருதி இயக்கி உள்ளனர்.குரோம்பேட்டை ராதா நகர் கல்ச்சுரல் அகாடமியில்அக்டோபர் 2-ம் தேதி நாடகம் அரங்கேறுகிறது
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி – ஏசிடிசி நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் .

ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் செலுத்த வேண்டிய 10% கேளிக்கை வரியை செலுத்தாததால் நோட்டீஸ் சென்னை, அண்ணா நகரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள்
சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை

வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை – ஏ.ஆர்.ரகுமான் .இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி, போக்குவரத்து நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூக்கு டிஜிபி உத்தரவு

*டிக்கெட் வழங்கும் நடைமுறை என்ன என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக விளக்க வேண்டும் *விளக்கம் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் – *இனிவரும் காலங்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்