சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு அறிவிப்பு
ரூ.500 கோடி வசூலைக் கடந்த ‘ஜெயிலர்’

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் ‘ஜெயிலர்’. இப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. இப்படம் ஒரு வாரத்தில் ரூ.375 கோடியே 40 லட்சம் வசூலித்ததாக படத்தைத் தயாரித்த நிறுவனம் ஆகஸ்ட் 17ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வார வசூலில் இது அதிகத் தொகை என்றும் சொன்னார்கள். அதன்பின் கடந்த நான்கு நாட்களில் இப்படம் ரூ.125 கோடி வசூலைக் கூடுதலாகக் கடந்து […]
திரைப்படம் நடித்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நடிகர் யோகிபாபு மோசடி

திரைப்படம் நடித்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நடிகர் யோகிபாபு மோசடி செய்வதாக தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாசீர் என்கிற முகம்மது ஹாசீர். இவர் விருகம்பாக்கம் கோதாவரி தெருவில் “ரூபி பிலிம்ஸ்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். “வண்டி”, “கன்னிமாடம்”, “மங்கி டாங்கி” உள்ளிட்ட பல திரைப்படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுக […]
ஜெயிலர் 4 நாள்கள் வசூல் எவ்வளவு

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் 4 நாள்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும்7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், முதல் வாரத்தின் இறுதி நாள்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 4 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. […]
வாரிசு, துணிவு வசூலை முறியடித்த ரஜினியின் ஜெயிலர் .. ஜெயிலர் முதல் நாள் வசூல் ரூ. 90 கோடி..
Jailer First Day Collection

Tamilnadu – 25crIndia – 55crOverseas. – 90cr
ஓடிடி தளத்தில் வெளியானது ‘மாவீரன்’

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ரீமேக் படங்களில் நடித்தால் என்ன தவறு? – சிரஞ்சீவி

‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கான ‘போலா சங்கர்’ பட நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, “ஏன் ரீமேக் படங்களிலே தொடர்ந்து நடித்து வருகிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை கதை நன்றாக இருக்கும்போது அதை ரீமேக் செய்து ரசிகர்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு? ஒடிடி வந்த பின் அனைத்து மொழி ரசிகர்களும் அனைத்து மொழிகளிலும் படங்களை பார்க்க முடிகிறது” என்றார்.
‘ஜெயிலர்’ பார்க்க போன தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
‘ஜெயிலர்’ படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

‘ஜெயிலர்’ படத்தை விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், “டார்க் காமெடி என்றால் திரையில் தோன்றுபவர்கள் சீரியஸான நேரத்தில் காமெடி செய்வார்கள். நமக்கு சிரிப்பு வரும். ஆனால் ஜெயிலரை பார்க்கும்போது திரையில் இருப்பவர்கள் செய்யும் காமெடியை பார்த்து நாம் சீரியஸாகி விடுகிறோம். படத்துக்கு வில்லன் கேரக்டர்தான் முக்கியம். ஆனால் வில்லன் படுத்தே விட்டானாய்யா ரேஞ்சுக்கு இருக்கிறார்” என்றார்.