ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நாடு திரும்பிய கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதியானது
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது. இந்நிலையில், அவருக்கு கிளாட்-1பி வகை குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருப்பதை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.கடந்த 2022ல் ஆப்ரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவக் காரணமானது கிளாட்-1பி வகை குரங்கம்மை வைரஸ். இதற்கு முன் இந்தியாவில் 30 பேருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் கிளாட்-2 வகை வைரஸ் தொற்று இருந்தது. தற்போது வீரியமிக்க கிளாட்-1பி வகை […]
குரங்கம்மைக்கு தடுப்பூசி ஏதேனும் உள்ளதா..?

குரங்கம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் ஆகும். இது மனிதர்களின் உடல் திரவங்களில் இருந்து, மற்றொருவருக்கு பரவும். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். குரங்கு அம்மைக்கு என்று தனியாக தடுப்பூசி எதுவும் இல்லை. பெரிய அம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியே குரங்கமைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி 85% வேலை செய்கிறது. எனவே நோயாளிகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.