வண்டலூர் சாலையில் நடந்த சாலை விபத்தில் பொன்னேரி தொகுதி முன்னாள் அ. தி.மு.க எம்.எல்.ஏ. ரவிகுமார் பலி
அவரது மனைவி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
புதுடெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி
எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்த முடிவு!
சென்னை சூளை, தட்டான்குளம் பகுதி வீட்டு உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலின் போது எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரசுராமன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் வாக்காளர்களை ஏமாற்றியதை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்த முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டது. வீட்டு உரிமையாளர்களை கருத்து கேட்ட பின்பு போராட்டம் தேதி அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது என கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிர்வாகிகள் ஒருவரான ஆர்.டி.பிரபு மற்றும் முனியாண்டி, பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர்.
ஜெயலலிதா முதல் பொன்முடி வரை… தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் யார்.? யார்.? பட்டியல் இதோ
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ- எம்பிக்கள் மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் கடந்த 2013 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாஜகவை சேர்ந்த சுரேஷ் கணபதி மின்சார திருட்டு வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பப்பு கலானி கொலை […]
“சுனாமி வந்துச்சி. ஊருக்குள்ளே தண்ணி வந்துச்சி. கடல்லேயே ஏன் தடுக்கலைனு கேட்கமுடியுமா? அதே மாதிரி மழை வந்திச்சி, ஊருக்குள்ளே தண்ணி வந்துச்சி. என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய முடியாது” – வேளச்சேரி எம் எல் ஏ ஹசன் மௌலானா

எப்பேர்ப்பட்ட புத்திசாலியை சட்ட மன்ற உறுப்பினராக பெற்றிருக்கிறார்கள் வேளச்சேரி மக்கள்! ‘லாட்டரியில்’ பரிசு விழுவதை போன்ற அதிர்ஷ்டசாலிகள் தான் வேளச்சேரி வாக்காளர்கள். நாராயணன் திருப்பதி
மணிப்பூர் கலவரத்தில் 2 மாதமாக சிகிச்சையில் இருக்கும் குக்கி பழங்குடி பாஜக எம்எல்ஏ!

மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மட்டுமின்றி, அந்த சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-க்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இவ்வாறு இனவெறி தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்எல்ஏ-க்களில் ஒருவர் 2 மாதங்களாக மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருப்பது தெரியவந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக சார்பில் 3 முறை சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் வங்குசாஜின் வால்டே. 61 வயதான இவரால் தற்போது எந்த துணையும் இன்றி அசைய கூட முடியாது. குரலை இழந்து பேசவும் முடியாமல் மருத்துவமனையில் […]
பெட்ரோல் குண்டு வீச்சு… உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ… கடலூரில் பதற்றம்..!
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த அய்யப்பன் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்ற பகுதியில் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகியின் இல்ல மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ அய்யப்பன் அங்கு சென்றார். அப்போது, […]
குரோம்பேட்டை மாணவர்களுக்கு பரிசு

தாம்பரம் மாநகராட்சி ஜமீன் ராயப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,11,12 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவித்து, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி 23-வது மாமன்ற உறுப்பினரும், கல்வி குழு உறுப்பினருமான ந.கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினர். பல்லாவரம் மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, செம்பாக்கம் வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே. […]