தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்சென்னை விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா நாட்டிற்கு புறப்பட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை விமான நிலையத்தில்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. வழியனுப்பி வைத்த தொண்டர்கள்!

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் சிறக்க, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைக்கின்றனர். தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்! “உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கா செல்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற நடிகர் திரு. சின்னி ஜெயந்த் அவர்களின்மகன் திரு. சுருதன்ஜெய், இ.ஆஃப., – மனஸ்வினி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தொழில் தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்க வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்டங்கள் வளர்ச்சி, தமிழ்நாட்டில் பரவலான மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை உறுதிசெய்வதே திமுக அரசின் நோக்கம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை எம்.ஆர்.சி. நகரில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிங்கப்பூர் நிறுவனம் உள்பட 47 நிறுவனங்களின் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. சென்னையில் 28 புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிட வளாகத்திலுள்ள “கலைஞர் உலகம்” அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்றுப் புகைப்படங்களை பார்வையிட்டார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில்

மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல்.முருகன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. பொதுத் துறை செயலாளர் திருமதி.ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப. […]
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பொதுத் துறை செயலாளர் திருமதி. ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த

மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.எல்.முருகன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.