தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அரசு இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டார்

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர்வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிருவாக ஆணையர் /கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு சந்தித்துப் பேசினார்

உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மாலை முரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்
தேமுதிகவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் திரைக்கலைஞருமான கேப்டன் Vijayakant மறைவையொட்டி

இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவிருந்த ‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா’வானது ரத்து செய்யப்பட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ நூல் வெளியீடு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு எளிய முறையில் நடைபெற்றது… இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் M K Stalin அவர்கள் நூலினை வெளியிட கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்…இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (28.12.2023) சென்னையில் உடல்நல குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உள்ளனர்.
சென்னை வர்த்தக மையத்தில் தமிழக அரசு சார்பில் இன்று வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெறவுள்ளது

இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்வதாகவும், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர் மற்றும் “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூல் வெளியிட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.. விஜயகாந்த் மறைவையொட்டி விழா ரத்து எளிமையாக நூல் வெளியிடல் மட்டும் நடக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். ▪️ நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் […]
தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.