அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு
அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

“முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம். முதற்கட்ட பயணம் வரும் ஜன.,28ம் தேதி துவங்குகிறது” என அமைச்சர் சேகர்பாபு நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட துறை நிலை ஓய்வூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். இப்புதிய திட்டத்தின் மூலம் 2,646 துறை நிலையிலான ஓய்வூதியதாரர்கள் பயன்பெற […]
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அசோக்குமார் மனைவி பெயரில் பங்களா கட்டி வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆஸ்திரேலிய கவுன்சில் ஜெனரல் சாரா கிர்லெவ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
பிரேமலதா விஜயகாந்திற்கு மத்திய அமைச்சர் ஆறுதல்

விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மலர்தூவி மரியாதை
பொங்கல் சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை. வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம். தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்-அமைச்சர் சிவசங்கர்.
முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ், வளர்மதி ஆகியோர் வழக்குகளிலும் பிப்ரவரி 5 முதல் 9 வரை தினசரி விசாரணை .. சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான மறு ஆய்வு வழக்கு. பிப்ரவரி 5 முதல் தினந்தோறும் விசாரணை உயர் நீதிமன்றம்..
மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 23-ம் தேதி நேரில் திறந்து வைக்கிறார் – அமைச்சர் மூர்த்தி பேட்டி
விருதுநகர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் (94), வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்

அவரது உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் அஞ்சலி