தமிழக ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த தாம்பரத்தில் மினி மாரத்தான்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் சார்பில் சென்னை மேற்கு தாம்பரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ், ராஜேஸ் ரமேஷ், வித்யா ராமராஜ், சுபா வெங்கடேஷ், நேத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக, மாரியப்பன், துளசிமதி, […]