மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 4284 கன அடியாக உள்ளது

அணையின் நீர் மட்டம் 116.46 அடியாகவும், நீர் இருப்பு 87.93 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை: வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பும் குறைப்பு!

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 50,000கன அடியிலிருந்து வினாடிக்கு 26,000கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாகவினாடிக்கு 4,500கன அடி நீரும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 26,000கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 93.47டி எம் சி […]
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது

அணைக்கு நீர் வரத்து 73,330 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.630 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
முழுதும் நிறைந்த மேட்டூர் அணை! 16 கண் மதகில் பொங்கி பாயும் காவிரி!
மேட்டூர்- டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம். குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கனஅடி நீர் திறக்கப்படுவதாக தகவல்
90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணை

மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அப்போதைய செலவுத்தொகை ரூ.4 கோடியே 80 லட்சம் ஆகும்.மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல்.ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு அளித்த வரப்பிரசாதம்: 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மேட்டூர் அணைகர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள மெக்காரா என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழியாக பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் வழியாக 800 கிலோமீட்டர் தூரம் கடந்து […]
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரிப்பு

நேற்று மாலை விநாடிக்கு 5026 கன அடி தண்ணீர் வந்த நிலையில், இன்று காலை 5358 அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 7500 கன அடி நீர் திறப்பு; நீர் இருப்பு 21.652 டி.எம்.சி. ஆக இருந்து வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிவு – நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிந்தது

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிந்த நிலையில், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவை கொண்டது. அணை கட்டப்பட்டபோது, காவிரி கரையில் இருந்த மக்கள் மேடான பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றை அப்படியே விட்டு சென்றனர். அணை நீர்மட்டம் குறையும் போது, காவிரி […]