இணைய குற்றங்களில் ஈடுபடும் நோக்கத்தில், பொதுமக்களின் அலைப்பேசிக்கு மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களில் குறிப்பிட்ட 8 தலைப்புகளில் மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பிய நிறுவனங்களை தொலைத்தொடர்பு துறை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனை

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனை நடத்தப்படும் என்பதை தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. .20.10.2023 தேதி, தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் வரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சோதனைகள் நடத்தப்படும்.

‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’

பேரிடர் கால அவசர தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ எனும் புதிய திட்டத்தின் சோதனை ஓட்டத்தை இன்று தமிழ்நாடு அரசு தொடங்குகிறது. இதன் மூலம் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைவருக்கு ஒரே நேரத்தில் பேரிடர் குறித்த எச்சரிக்கை அனுப்பப்படும்.