தமிழக பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது

இந்த கூட்டத்தில் தேசிய தலைமை சார்பில் பி.எல்.சந்தோஷ் பங்கேற்கிறார்.கூட்டணியில் இருந்து அண்ணா தி.மு.க விலகியது குறித்தும், எதிர்கால அரசியல் நகர்வு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் தொடங்கியது

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையில் கூட்டம் நடக்கிறது. நிலுவையில் உள்ள அளவையும் சேர்த்து, வினாடிக்கு 12,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். அக்டோபர் மாதத்தில் திறக்க வேண்டிய 22.14 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் – தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் (29.09.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், ஆணையர் ஆர்.அழகுமீனா, மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நாளை (29.09.2023) காலை 10.00 மணி அளவில் மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.
செம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம்

செம்பாக்கம் தெற்கு பகுதி திமுக 41 வட்டம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞத் நூற்றாண்டு மற்றும் திராவிட மாடல் அரசின் விளக்கப்பொது கூட்டம் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. பகுதி துணை செயலாளர் லட்சுமிபதிராஜா தலைமை வகித்தார். திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், தமிழ்நாடு தோல் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் விளக்கி பேசினார்.. மத்தியில் ஆளும் பாஜக சதான பாசிச ஆட்சி நடைபெறுவதாக கூறிய அவர் […]
புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனருடன் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு
புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் திரு இல. நிர்மல்ராஜ் IAS அவர்களைஇன்று(07.09.2023) மாலை 6.00 மணியளவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் தோழர் கு.பால்பாண்டியன், சுரங்கத் துறை பணியாளர் சங்கத்தின் தலைவர் சா. ஜான்சன் சத்தியராஜ் ஆகியோர் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முகமலர்ச்சியுடன் எங்கள் கோரிக்கைகளை ஏற்று உரிய உத்தரவு வழங்குவதாக உறுதி கூறினார்.
சென்னை, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் வழக்கறிஞர் அணி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என தகவல்?
தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டம் ரூபாய் 3.64 கோடி மதிப்பீட்டில் 20 தீர்மானங்களுக்கு அனுமதி

பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் 4வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் ஷகிலா முன்னிலை வகித்தார்.இதில் 4வது மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் பேசுகையில், தாம்பரம் காந்தி சாலை – முத்துரங்க முதலி சாலை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் […]