மேடவாக்கத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மேடவாக்கம் புதிய காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகர காவல் எல்லை துவங்கப்பட்ட போது 20 காவல் நிலையங்கள் இருந்தது. அதன் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிளாம்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிகரணை காவல் நிலையத்தை பிரித்து மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு கோவிலம்பாக்கத்தில் மேடவாக்கம் காவல் நிலையத்தை தாம்பரம் […]

கொசுவத்தியால் தீ விபத்து மேடவாக்கத்தில் முதியவர் கருகி சாவு

மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70) கார்பெண்டரான இவர் அப்பகுதியில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். நேற்று இரவு முதியவர் ராஜமாணிக்கம் வசித்து வந்த வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பள்ளிகரனை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்த பின்பு பார்த்த போது படுக்கையில் ராஜமாணிக்கம் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக […]

பள்ளி குழந்தையுடன் ஸ்கூட்டரில் மழை நீரில் விழுந்த தாய் 200 பேர் விழுந்த பரிதாபம்

மேடவாக்கத்தில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய் ஸ்கூட்டரில் செல்லும்போது மழை நீரில் கீழே விழுந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேடவாக்கம், வி.ஜி.பி பாபு நகர் முதல் மெயின்ரோட்டில் மேடவாக்கம் பஜார் தண்ணீர் மொத்தமும் இங்கே குவிந்துள்ளது. பெரிய பள்ளம் ஏற்பட்டு குளம்போல் நீர் தேங்கி உள்ளதால் 2 நாளில் சுமார் 200 பேருக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்துள்ளனர். மேலும் இன்று பள்ளி சென்று குழந்தையை அழைத்து வந்த தாய் […]

மேடவாக்கம் அடுத்த அரசன்கழனியில் மழைநீர் கால்வாயில் பயணிகளுடன் விழுந்த ஆட்டோ

மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் முடுகால்வாயில் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் விழுந்து லேசானகாயம், விழுந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் நீரில் சிலமணி நேரம் மிதந்த ஆட்டோவை அங்குள்ள பணியளர்கள் மீட்டனர். கால்வாயில் ஒரு பகுதி திறந்துவைக்கப்பட்டதால் ஆட்டோ கவிந்து விபத்து ஏற்பட்டுள்ளது..

மேடவாக்கத்தில் தெருக்கூத்து ஆடும் திருநங்கை படுகொலை

சென்னை மேடவாக்கம் அடுத்த கோவிலாஞ்சேரியில் தனியார் வீட்டுமனை பிரிவுக்கு செல்லும் வழியில் உள்ள சிறு மேம்பாலம் அருகே நீரில் மிதந்தவாறு திருநங்கை சடலம் கிடந்தது. மேலும் அங்கு டியோ இருசக்கர வாகனமும் இருந்த நிலையில் தகவல் அறிந்த சேலையூர் போலீசார் பிரேதத்தை மீட்ட நிலையில் தலை, கழுத்து, பின் கழுத்து முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுகாயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதே வேளையில் அங்கு திரண்ட நபர்களிடம் போலீசார் […]

மேடவாக்கத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து. ஒரு தலை காதலால் வாலிபர் விபரீதம்

சென்னை மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வண்டலூரில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக கனிஷ்கா(16), என்ற மாணவி காத்திருந்த போது ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த என்பவர் கத்தியால் மாணவியை சரமாறியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் டிப்ளமோ படிக்கும் கல்லூரி மாணவிக்கு தலை, தொடை, கைவிரல், முகத்தின் தாடை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் […]