கொட்டும் மழையில் நின்று பேசிய அண்ணாமலை

மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். வரும் பொதுத்தேர்தலில் பாஜக வென்றுவிட்டால், 2026 தேர்தலில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைக்கும்” என மழையில் நனைந்தபடி பேசினார்.