திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மு.க.ஸ்டாலின் (24.11.2023) சென்னையில் நடைபெற்ற புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் மகள் எஸ்.காயத்ரி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரி தலைவர் வி.எம்.முரளிதரன் அவர்களின் மகன் எம்.சரவண் கிருஷ்ணா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். உடன் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, ஏ.எம்.எச்.நாசீம், ஆர்.செந்தில்குமார் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.
உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் பாலாஜி தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச்சென்று ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் ஒருகட்டத்தில் அப்பெண்ணுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்தப் பெண்ணின் குடும்பத்தார் போலீஸில் புகார் அளித்த நிலையில், பாலாஜியை கைது செய்தனர். அவரது குடும்பத்தாரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் தனது நெருங்கிய நண்பரான சலீம் கரீமை மணந்தார்

கரீம் தொழிலில் ஒரு தொழிலதிபர். மஹிரா கான் 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக Raees என்ற ஆக்ஷன்-ரொமான்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிறகு ஹிந்தித் திரையுலகில் அலைகளை உருவாக்கினார்.
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்….’ – கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்…!

நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பாளையங்கோட்டை, தெகிடி, போர் தொழில் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அசோக் செல்வன். மேலும் ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.தெகிடி படத்தில் இடம் பெற்றிருந்த “பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்” பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் அசோக் செல்வன். சமீபத்தில் வெளியான போர் தொழில் ரசிகர்கள் […]
ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு..!

ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கப்படுவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய […]
பிரபல நடிகையுடன் திருமணமா?; விஷால் விளக்கம்

சமீபத்தில் நடிகர் விஷாலும் நடிகை லஷ்மி மேனனும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், “இந்த தகவல் உண்மையல்ல. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த வதந்திக்கு நான் விளக்கம் அளிக்கிறேன். நேரம் வரும்போது திருமணம் குறித்து நானே அறிவிக்கிறேன்” என விஷால் விளக்கமளித்துள்ளார்.
பீட்சா, புடவைக்காக திருமண ஒப்பந்தம்! வைரலாகும் தம்பதி

இன்றைய தலைமுறையினர் புதுப்புது செய்கைகளால் தினமும் வைரலாகி வருகின்றனர். அந்த வகையில், அசாமை சேர்ந்த மிண்டு-சாந்தி ஜோடி தங்களது திருமணத்தில், மாதம் ஒருமுறை மட்டுமே பீட்சா, தினந்தோறும் சேலை உடுத்துதல், ஜிம் செல்லுதல், 15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங், தன்னுடன் மட்டுமே இரவுநேர பார்ட்டி, ஞாயிறு கணவர் சமையல் என பல ஒப்பந்தமிட்டு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.