மணிப்பூர் வன்முறையின்போது பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் போலீசில் வாக்குமூலம்

மணிப்பூரில் மானபங்கம் செய்யப்பட்ட 2 பழங்குடியின பெண்களை போலீசார் நேரில் சந்தித்து அவர்களின் வாக்கு மூலத்தை பெற்றனர்.இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையிராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் 3-ந் தேதி குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தில் 160-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோய் உள்ளன. இந்த சூழலில் குகி பழங்குடியினத்தை 2 பெண்களை […]
மணிப்பூர் விவகாரம் – பாஜக மாநில நிர்வாகி ராஜினாமா

மணிப்பூர் நிலைமை இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் பாஜகவில் இருந்து விலகுகிறேன்” – பிகார் மாநில செய்தி தொடர்பாளர் வினோத் சர்மா. மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை விவகாரத்தை பாஜக சரியாக கையாளாததால் ராஜினாமா செய்வதாக நட்டாவுக்கு கடிதம் அனுப்பினார்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளிநடப்பு

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் – மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தொடர் தொடங்கி 5 நாட்கள் ஆகியும், பிரதமர் இன்னும் பதிலளிக்கவில்லை
மணிப்பூர் கலவரத்தில் 2 மாதமாக சிகிச்சையில் இருக்கும் குக்கி பழங்குடி பாஜக எம்எல்ஏ!

மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மட்டுமின்றி, அந்த சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-க்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இவ்வாறு இனவெறி தாக்குதலுக்கு உள்ளான பாஜக எம்எல்ஏ-க்களில் ஒருவர் 2 மாதங்களாக மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருப்பது தெரியவந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக சார்பில் 3 முறை சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் வங்குசாஜின் வால்டே. 61 வயதான இவரால் தற்போது எந்த துணையும் இன்றி அசைய கூட முடியாது. குரலை இழந்து பேசவும் முடியாமல் மருத்துவமனையில் […]
மணிப்பூர் கொடூரம் திமுக மகளிர் அணி கொட்டும் மழையில் பரிமளா சிட்டிபாபு தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுர தாக்குதலை தடுக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிமளா சிட்டிபாபு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், கிரிஜா சந்திரன், சசிகலா கார்திக் உள்ளிட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது […]
பாலவாக்கத்தில் மோடி உருவ பொம்மை எரிக்க முயற்சி
மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்கள் மீது நடைபெறும் பாலியல் தாக்குதலை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும்மையாக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தில் பாலவாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது யூசுப் தலைமை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைமை நிலைய செயலாளர் ஜைனுல் ஆபிதின், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோமு, விடுதலைச்சிறுத்தை கட்சி காஞ்சி-விழுப்புரம் மண்டல செயலாளர் சூ.க.செழியன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், இயக்க நிர்வாகிகள் 500 க்கும் […]
மணிப்பூர் கலவரம் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் இனக்கலவரத்தை தடுக்காத மத்திய பாஜக மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தாம்பரம் பெரிய மசூதியில் இருந்து ஊர்வலமாக வந்த நிலையில் சண்முகம் சாலையில் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், […]
“மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது”

“பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும்” “மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம் “சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் “- பிரதமர் மோடி
“மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துச் சென்ற விவகாரத்தை ஏற்க முடியாது

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் நடவடிக்கை எடுத்தது தொடர்பாக அறிக்கையை மணிப்பூர் அரசு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்”
மணிப்பூர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ்

நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க வலியுறுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது ஆளுநர் மூலம் நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் பிரச்சனை எழுப்புவோம். விலைவாசி உயர்வு, அதானி குழுமம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்புவோம். டெல்லி நிர்வாகம் தொடர்பான ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கும் எனவும் கூறினார்.