மணிப்பூரில் 20ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை

மணிப்பூரில் மொபைல் இணைய சேவைக்கு விதிக்கப்பட்ட தடை 20ஆம் தேதிவரை நீட்டிப்பு. மணப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக குக்கி, மெய்தி பிரிவினருக்கு இடையே மோதல். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 5 மாவட்டங்களில் ஊரடங்கு.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு தளர்வு ரத்து.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் காயம்

குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. காவலருக்கு ஆதரவாக குக்கி மக்கள் கராசந்த்பூரில் திரண்டதால் பதற்றமான சூழல். நிலமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

மணிப்பூரில் வன்முறை இல்லா பகுதிகளில் சோதனை முறையில் மொபைல் இன்டர்நெட் சேவை வழங்க உத்தரவு

மே மாதம் முதல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த மொபைல் இன்டர்நெட் சேவைக்கான தடை இன்றுடன் முடிவடைகிறது

இரவில் திடீர் நிலநடுக்கம்! – குலுங்கிய கலவர பூமி

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. உக்ருள் நகரில் இருந்து 66 கிலோ மீட்டர் தென் கிழக்கில், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாகவும், நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று, அந்தமான் அருகே கடற் பகுதியில் 93 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 4.4 அலகுகளாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3பேர் உயிரிழந்தனர். தவாய் கிராமத்தில் நிகழ்ந்த வன்முறையில் தன்னார்வலர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தில் மே 3ஆம் தேதி முதல் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல் அளித்துள்ளது.

மணிப்பூர் கலவரம் ஒய்வு. மத்திய மந்திரி வண்டலூரில் பேட்டி

வண்டலூரில் உள்ள தேசிய பாதுகாப்பு படை வளாகத்தில் 30.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 64 குடியிருப்பு வளாகங்களை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்து உரையாற்றினார். அப்போது:- 9 ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்காக 28 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டி வழங்கி உள்ளது. பாதுகாப்பு வீரர்களின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் […]

மணிப்பூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: கூட்டு பலாத்காரம் செய்ததாக பெண் புகார்

இம்பால்: மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கலவரத்தின்போது தன்னை ஆறு ஆண்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக மற்றொரு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் மணிப்பூரில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சூரச்சந்த்பூர் மாவட்டத்தைச் […]

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் நடந்து வருகிறது

மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

மணிப்பூர் இன வெறி விவகாரம்:

போகாத ஊருக்கு வழிகாட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மணிப்பூர் இளம் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் படுகொலை வீடியோக்கள் உலக அளவில் பெரும் அதிர்வு ஏற்படுத்தியது. இதுகுறித்தும்??? பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை??? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்க திணறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காசி தமிழ் சங்கம். தமிழ் சமஸ்கிருதம் இந்தி புறக்கணிப்பு என்று சம்பந்தமில்லாமலும் மதுரை எய்ம்ஸ் நிதி பற்றாக்குறை குறித்தும் ஜல்லிக்கட்டுக்கு பாஜக போராடியதாக ஒன்றிய அமைச்சர் பேசினார். பேச வேண்டிய […]