அமைச்சர் வாகனத்தில் மாஜி அமைச்சர் பயணம்!

திருசசியில், பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அரசு வாகனத்தில், சிறை தண்டனை பெற்ற மாஜி அமைச்சர் அமர்ந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் தொ.மு.ச., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சரும், தி.மு.க., […]