மஹிந்திரா குழுமம், ICICI, Dr Reddy’s உள்ளிட்ட 6 நிறுவனங்களிடம் இருந்து SEBI தலைவர் மாதபி புச் தனது Agora Advisory நிறுவனம் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

2016-17 மற்றும் 2023-24 இடைப்பட்ட காலத்தில் அந்த 6 நிறுவனங்களிடம் இருந்து மாதபி புச் ரூ.2.95 கோடி வருவாய் ஈட்டியதாக புதிய தரவுகளை வெளியிட்டு காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. SEBI அமைப்பிடம் மஹிந்திரா குழுமம் சில விசாரணைகளை எதிர்கொண்டு வந்த போது, அக்குழுமத்தின் ஆலோசகராக பணியாற்றிய மாதபியின் கணவர் தவல் புச் தனிநபராக ரூ.4.78 கோடி வருமானம் ஈட்டியதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.