பெண்களுக்கான சட்டங்கள் எவை?
பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம்.. மத்திய அரசு தகவல்

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் வாங்கலாம். இந்தக் கடன்களின் வட்டி விகிதங்கள் சந்தையைப் பொறுத்து மாறுபடும். கடன் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். எஸ்பிஐ கிளையைத் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெறலாம்.
சென்னையில் உள்ள தனியார் துணிக்கடைகளில் திருடிய புடவைகளை காவல்நிலையத்துக்கு திருப்பி அனுப்பிய ஆந்திர பெண்கள்

சிசிடிவி காட்சியில் புடவை திருடியது அம்பலம் – போலீசார் ஆந்திராவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் திருப்பி அனுப்பி வைத்தனர்
தாம்பரம் சானிட்டோரியத்தில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் 464 படுக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் புதியதாக கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள அரசு பணிபுரியும் பெண்களுக்கான விடுதியினை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு அமைக்கப்படும் தங்கும் […]
பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும்மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் சென்னை,செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை,தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில்11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம்94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல்விபரங்களை அறியலாம்; http://tnwwhcl.in என்ற இணையதளத்தில்விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய […]