சென்னை கோயம்பேடு மொத்த மார்கெட்டில் 2019ம் ஆண்டு கடைகள் ஒதுக்கீடு டெண்டரில் மோசடி.

சி.எம்.டி.ஏ. கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீனிவாச ராவ் உள்பட இருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு. லஞ்சம் பெற்றுக்கொண்டு உணவகம் வைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை 11 சிறிய கடைகளாக பதிவு செய்து அரசுக்கு சுமார் ₹86 லட்சம் இழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு.
சென்னை, கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ₨110க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்ந்துள்ளது. 1,100 டன் தேவைப்படும் நிலையில் 400 டன் வந்துள்ளதால் தக்காளி விலையேற்றம் கண்டுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூபாய் 20 விலை உயர்ந்துள்ளது.

சில்லறை விற்பனையில் ரூ.140 முதல் ரூ.150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.