கோவையில் நேற்று மாலை பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் கலைந்த பின்னர் சாலையில் இருந்த குப்பைகளை பாஜகவினரே அகற்றினர்
கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் கியா கார் ஷோரூம் வைத்திருக்கும் அனீஸ் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு 16, 17 தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜனவரி 17, 18 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன!

தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
கோவையில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை துவக்கி வைத்த தமிழக முதல்வர்…
கோவை: திருமலையாம்பாளையம் அருகே எரிவாயு லாரியில் இருந்து எரிவாயு கசிந்ததால் பரபரப்பு

4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் இணைந்து அதை சரி செய்தனர். கேரளாவில் இருந்து கோவை வந்த எரிவாயு லாரி மீது சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

9 பேர் டெங்குவுக்காகவும், 23 பேர் காய்ச்சலுக்காகவும் அனுமதி. டெங்கு எச்சரிக்கைக்கு முன்னதாக 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
விற்பனையை அதிகப்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை;

பீர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது, மது அருந்துபவர்களை ஊக்குவிப்பதற்காக அல்ல; வியாபாரத்தை பெருக்குவது எங்களது நோக்கமல்ல; எப்படியாவது மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்”
கோவை, விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் – 2 பேர் கைது

அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலைபாம்பு, ஆமை, சிலந்தி, ஓணான் உள்ளிட்டவை பறிமுதல் நவ.7ம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் 3 பேர் விட்டு சென்ற பெட்டியில் நடத்திய சோதனையில் கண்டெடுப்பு
கோவை – பாலக்காடு சாலையில், உள்ள தி.மு.க எம்.பி.ஆ.ராசாவுக்கு சொந்தமான பல ஏக்கர் காலி நிலத்தை அமலாக்கத்துறையினர் கை பற்றி சீல் வைத்தனர்