8 மாத கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம் – 35 வயது கேரள சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35. கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மற்றொரு சீரியல் நடிகை நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்தது. இந்தநிலையில், நடிகை பிரியாவும் உயிரிழந்த செய்தி மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த பிரியா, மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் வழக்கமான கர்ப்ப […]
கேரளாவில் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

கேரளாவில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்ட உறுதியோடு நிற்போம் என தீர்மானம். அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்த நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு புறப்பட்டார் முதலமைச்சர் பினராயி விஜயன்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. 41 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் உயிர் இழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் 5 நபர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு துறை ஏடிஜிபி குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணைக்கு தலைமை வகிப்பார். 20 பேர் அடங்கிய பல்வேறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 29, 30ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, கேரளாவில் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட சென்னையில் இருந்து மதுரை வழியாகக் கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது

தற்போது திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16127) வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 29 மற்றும் 30-ந் தேதிகளில் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
கேரள லாட்டரி பரிசு: ரூ.25 கோடி யாருக்கு?

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த நால்வர் வாங்கிய கேரள லாட்டரி சீட்டுக்கு, பம்பர் பரிசாக 25 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், தமிழகத்தில் வாங்கப்பட்டதால் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட லாட்டரிச்சீட்டாக கருதி, பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. லாட்டரி சீட்டை விற்ற நபர் தலைமறைவாக உள்ளார். கேரள லாட்டரி ஓணம் பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் நடந்த குலுக்கலில், ‘டிஇ 230662’ என்ற எண்ணுள்ள லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பரிசுகிடைத்தது. திருப்பூர் […]
கேரளாவில் பரவி வரும் புதிய நோய்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘புருசெல்லோசிஸ்’ என்ற புதிய நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெம்பாயம் பகுதி அருகே உள்ள வேற்றிநாடு என்ற இடத்தில் இந்த தொற்றுக்கான அறிகுறி சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கால்நடைகளிடம் இருந்து இந்த தொற்று பரவி தந்தை மற்றும் மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிபா வைரஸ் எதிரொலி – விடுமுறை

நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு; இதுவரை 789 பேர் பாதிப்பு, 77 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கண்காணிப்பில் உள்ள 157 சுகாதர பணியார்களில் 13 பேர் கோழிக்கோடு மருத்துமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் குட்டியாடி, ஆயஞ்சேரி பகுதியில் மத்திய குழுவீனர் இன்று ஆய்வு – வவ்வால் கணக்கெடும் பணி தீவிரம் ..
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த இருவர் உயிரிழப்பு.

நிபா வைரஸ் பரவலை உறுதிப்படுத்தினார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது மாதிரிகள் பூனாவிற்கு அனுப்பப்பட்டது..
கேரள அரசு பஸ்களில் டிரைவர்களுக்கு சீட் பெல்ட்

திருவனந்தபுரம்: கார்கள் உள்பட இலகு ரக வாகனங்களில் டிரைவர்கள் மற்றும் முன் இருக்கையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சீட் பெல்ட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்களுக்கும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்க சமீபத்தில் தீர்மானிக்கப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதையடுத்து கேரளாவில் அரசு பஸ்களில் டிரைவர்கள் மற்றும் கேபின்களில் இருப்பவர்களுக்கு சீட் பெல்ட் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான பணிகள் தொடங்கும் என […]