மனோஜ்க்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்

கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் !மகனே மனோஜ்!மறைந்து விட்டாயா?பாரதிராஜாவின்பாதி உயிரே! பாதிப் பருவத்தில்பறந்து விட்டாயா?‘சிங்கம் பெத்த பிள்ளையின்னுதெரியவப்போம் வாடா வாடா’என்று உனக்குஅறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப்பிள்ளைநீ போய்விட்டாயா?உன் தந்தையைஎப்படித் தேற்றுவேன்? “எனக்குக் கடன் செய்யக்கடமைப்பட்டவனே!உனக்கு நான் கடன்செய்வதுகாலத்தின் கொடுமைடா” என்றுதகப்பனைத் தவிக்கவிட்டுத்தங்கமே இறந்துவிட்டாயா? உன் கலைக் கனவுகள்கலைந்து விட்டனவா?முதுமை – மரணம் இரண்டும்காலத்தின் கட்டாயம்தான்.ஆனால், முதுமைவயதுபார்த்து வருகிறது;மரணம் வயதுபார்த்துவருவதில்லை சாவுக்குக் கண்ணில்லைஎங்கள் உறக்கத்தைக்கெடுத்துவிட்டவனே!உன் உயிரேனும்அமைதியில் உறங்கட்டும் !

டாக்டர் பட்டத்தைவிடசங்கரய்யா என்றபெயர்ச்சொல் மேலானது

இந்தத் தப்புத் தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல் தந்தாலும்பெரியவர் சங்கரய்யா அதை இடக்கையால் புறக்கணிக்க வேண்டும். பெயருக்கு முன்னால் அணிந்து கொள்ள முடியாத மதிப்புறு முனைவர் பட்டத்தைவிடத்தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது. கொள்கை பேசிப் பேசிச் சிவந்த வாய் அவருடையது. இனி இந்த வாடிப்போன வெற்றிலையாலாவாய்சிவக்கப் போகிறது? கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதல்-வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநா-ள் வாழ்த்து தெரிவித்தார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளைபெற்ற கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளான இன்று அவரை நேரில் சந்தித்து முதல்வ-ர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.