அனுமதியின்றி குடியிருப்புகளை இடிப்பதற்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் குடியிருப்புகள் இடிக்கப்படும் விவகாரத்தில் வழிகாட்டுதல்கள் வழங்குவது தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற பதிவாளர் விளக்கம் கேட்பதாக கூறி தவறான மனுவை தாக்கல் செய்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தகவல் தொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து தெளிவு தேவை என கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசின் […]

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது ..

சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?, சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் ,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு புனையப்பட்ட பொய் வழக்கு;

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை

சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக புகார். கடந்த 1996-2001ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, நிலத்தை அபகரித்ததாக பொன்முடி மீது வழக்கு. குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படவில்லை- சிறப்பு நீதிமன்றம். “அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை” எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு

கடந்த 2001 ம் ஆண்டு அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து , மாமியார் பெயரில் பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீது விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு ,இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு ……